ராமர் பட்டாபிஷேகம்

Date: 2016-11-01 முகப்பு

(1477996332)large_152226194.jpg

கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நாள் தீபாவளி என்றாலும், விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான ராமனோடும் இந்நாள் தொடர்புடையது. காட்டுக்குச் சென்ற ராமர், தன் மனைவி சீதையைப் பிரிய நேர்ந்தது. பின்னர் அனுமனின் உதவியுடன் இலங்கையை அடைந்த ராமர், சீதையைக் கடத்திச் சென்ற ராவணனுடன் போரிட்டார். சீதையை மீட்டு வெற்றியுடன் தாய்நாடு திரும்பினார். இந்த நன்னாளே தீபாவளியாக கருதப்படுகிறது. இந்நாளில் ராமர், சீதையை வரவேற்கும் விதத்தில் அயோத்தி மக்கள் வரிசையாக விளக்கேற்றி வைத்தனர். வசிஷ்டர் தலைமையில் ராமருக்கு பட்டாபிஷேகமும் இந்த நாளில் நடந்தது. திருமாலுக்கும், லட்சுமிக்கும் திருமணம் நடந்த நாளும் தீபாவளி என்று விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisments

Standard Advertisments

(1486123912)side.jpg