மீண்டும் இணையும் தனுஷ் - செல்வராகவன்?

Date: 2016-11-01 முகப்பு

(1477997758)201611011126178776_Dhanush-Selvaraghvan-again-joint-new-movie_SECVPF.gif

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் தனுஷ். அதைத் தொடர்ந்து ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய செல்வராகவன் இயக்கிய படங்களிலும் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது ஐந்தாவது முறையாக தனுஷ் - செல்வராகவன் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்திகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்வராகவன் இயக்கத்தில் தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதுதவிர, சந்தானம் நடிக்கும் படமொன்றையும் இயக்கவுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ராஜ்கிரண், பிரசன்னா நடிக்கும் ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கி வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர, சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்திற்கு கதை எழுதி வருகிறார்.

இந்த படங்களுக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என தெரிகிறது.

Advertisments

Standard Advertisments

(1486123912)side.jpg