மத்திய அரசு எனக்கு விருது அறிவித்தை ஆசீர்வாதமாக கருதுகிறேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

Date: 2016-11-01 முகப்பு

(1477997843)201611011532116267_Modi-govt-announces-award-for-legendary-singer_SECVPF.gif

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பாடல்கள் பாடியதோடு மட்டுமல்லாமல், படங்களில் நடித்தும், இசையமைப்பும் செய்துள்ளார். 

தேன் குரலுக்கு சொந்தக்காரரான பாலசுப்பிரமணியத்திற்கு மத்திய அரசு இந்திய திரைப்பட சிறப்பு பிரமுகர் விருது அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று டெல்லியில் வெளியிட்டுள்ளார்.

47-வது சர்வதேச திரைப்பட விழாவுக்குன போஸ்டர் மற்றும் டிரெயிலரை வெளியிட்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, சர்வதேச திரைப்பட விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இந்த விருத வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த சர்வதேச திரைப்படவிழாவில் 88 நாடுகளை சேர்ந்த 1032 திரைப்படங்களில் 192 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். 

மத்திய அரசு விருது அறிவித்துள்ளது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, எனக்கு விருது அறிவித்துள்ளதை பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறேன். எனக்கு இந்த தகுதி இருக்கிறதா? என்பது எனக்கு தெரியாது. 

ஆனால், எனக்கு இந்த தகுதி இருக்கிறது என்பதற்கு அவர்கள் நினைத்ததற்கு காரணம் இந்த சினிமா உலகம்தான். இந்த சினிமாவில் நிறைய பேரின் கூட்டு முயற்சியால் பலபேருக்கு புகழ் கிடைக்கிறது. அந்த மாதிரி புகழ் கிடைத்ததில் நானும் ஒருவன் என்பதில் பெரும் மகிழ்ச்சி பிறக்கிறது என்றார். 

Advertisments

Standard Advertisments

(1486123912)side.jpg