பிரபல நடிகை எடுத்த திடீர் முடிவு

Date: 2016-11-01 முகப்பு

(1477997880)201610261112054565_Famous-actress-take-sudden-decision_SECVPF.gif

சமத்தான நடிகை பிரபல தெலுங்கு நடிகரை திருமணம் செய்யப்போவதாக கடந்த சில மாதங்களாகவே ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், இனிமேல் படங்களில் அவர் நடிக்கமாட்டார் என்று எண்ணியிருந்த வேளையில், தற்போது வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.

அடுத்த வருடம்தான் திருமணம் என்று தற்போது நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், கமிட்டான படங்களில் அதற்குள் நடித்து முடித்துவிடலாம் என்று எண்ணிதான் நடிகை இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அப்படியிருக்கையில், சமத்தான நடிகை தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம்.

அதாவது, இனிமேல் அவர் நடித்த எந்த படத்தையும் முதல் நாள் தியேட்டருக்கு சென்று பார்க்கமாட்டாராம். ஏன் என்று கேட்டால், அவர் நடித்து வெளிவந்த சமீபத்திய படங்களை முதல்நாள் தியேட்டருக்கு சென்று நடிகை பார்த்தாராம். அப்போது அவருடன் படம் பார்த்தவர்கள் படம் சரியில்லை, ஓடாது என்று கூறினார்களாம். அதனால் அவருடைய மனம் மிகவும் புண்பட்டு விட்டதாம். இதனால், இனிமேல் முதல்நாள் தான் நடித்த எந்த படத்தையும் நடிகை பார்க்கமாட்டாராம்.

Advertisments

Standard Advertisments

(1486123912)side.jpg