ஆண்டு வர்த்தகம் ரூ.20 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு: அருண் ஜெட்லி தகவல்

Date: 2016-11-01 முகப்பு

(1477998246)201609240840154342_Rs-20-lakh-annual-turnover-threshold-for-GST-exemption-arun_SECVPF.gif

புதுடெல்லி:

நாடு முழுவதும் மறைமுக வரித்துறையை சீர்திருத்தும் நடவடிக்கையாக அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்படுகிறது. இதற்கான வரிகள், வரைவு கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வகுக்கும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

நிதி மந்திரி தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில் நேற்று முதல் முறையாக கூடி பல்வேறு முடிவுகளை எடுத்தது. இதில் முக்கியமாக, மாநிலங்களில் ரூ.20 லட்சத்துக்கு கீழ் ஆண்டு வர்த்தகம் மேற்கொள்பவர்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. வடகிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்களுக்கு இந்த உச்சவரம்பு ரூ.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி பின்னர் தெரிவித்தார்.

இந்த குழுவின் அடுத்த கூட்டம் 30-ந் தேதி நடைபெறுகிறது. அப்போது ஜி.எஸ்.டி. விலக்கு மற்றும் வரைவு கொள்கைகள் இறுதி செய்யப்படுகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந் தேதி முதல் 3 நாள் நடைபெறும் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. விகிதம் மற்றும் வரிகள் குறித்து முடிவு செய்யப்படுகிறது.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை வரவேற்றுள்ள மேற்கு வங்க நிதிமந்திரி அமித் மித்ரா, ரூ.20 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதன் மூலம் சிறு வர்த்தகர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.

Advertisments

Standard Advertisments

(1486123912)side.jpg