இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட ருவண்டாவின் நல்லிணக்கத்துக்கு படைத்தரப்பின் பாரிய பங்களிப்பு

Date: 2017-08-11

(1502427339)625.147.560.350.160.300.053.800.264.160.90 (5).jpg

இனப்படுகொலை நிகழ்ந்த ருவண்டாவில் நல்லிணக்க முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து இலங்கையின் படையினர் திருப்தி வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து ருவண்டா சென்றிருந்த பாதுகாப்பு சேவையின் அதிகாரிகள் இந்த திருப்தியை வெளியிட்டுள்ளனர்.

1994ஆம் ஆண்டு ருவண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலையின்போது 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

எனினும் 23 வருடங்களில் அந்த நாட்டில் நல்லிணக்க முயற்சிகளில் பாரிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

அங்கு படைப்பிரிவுகளும் திறமையான படைப்பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அவர்கள் நாட்டின் நல்லிணகத்துக்கு பாரிய பணிகளை செய்துவருவதாக இலங்கை குழுவின் தலைவர் கேனல் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே ருவண்டாவின் படிப்பினையைக்கொண்டு இலங்கையிலும் நல்லிணக்க முயற்சிகளுக்கு படைத்தரப்பினர் உதவமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisments

Standard Advertisments