மாகாணசபை தேர்தல் குறித்து முதலமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை

Date: 2017-08-11

(1502427655)625.147.560.350.160.300.053.800.264.160.90 (10).jpg

மாகாணசபைத் தேர்தல் குறித்து முதலமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

மாகாணசபை தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டுமென மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

மாகாணசபை தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது தொடர்பில், மாகாண முதலமைச்சர்களுக்கு இடையில் மாநாடு ஒன்று நடத்தப்பட உள்ளது.

மாகாணசபை தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படுவது வரவேற்கப்பட வேண்டியதாகும்.

1988ம் ஆண்டு முதல் மாகாணசபை தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட்டது.பல்வேறு பிரச்சினைகள் காரணமாக 1999ம் ஆண்டின் பின்னர் மாகாணசபைத் தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படவில்லை.

மாகாணசபைகளின் பதவிக் காலம் பூர்த்தியானதன் பின்னர் ஆளுனர்கள், மாகாண நிர்வாகத்தை பொறுப்பேற்றுக் கொள்வது அரசியல் பொறுப்புக் கூறுதல்களுக்கு தடையாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisments

Standard Advertisments