கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய புதிய நீதிமன்றம்

Date: 2017-08-19

(1503121750)625.147.560.350.160.300.053.800.264.160.90 (6).jpg

கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்த புதிய நீதிமன்றமொன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற குழுவொன்றை நியமித்து அதன் ஊடாக கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

அரசாங்கம் இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய, பிரதம நீதியரசர் பிரசாத் டெப்பிடம் மூவர் அடங்கிய நீதிபதி குழாம் ஒன்றை நியமிக்குமாறு கோரியுள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதம நீதியரசர் இந்த வாரத்தில் இந்த நீதிபதிகள் குழாமை நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலும் உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவின் தலைமையில் இந்த நீதவான் குழாம் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகள் சாதாரண வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதனால் ஏற்பட்டு வரும் கால தாமதத்தை தடுக்கும் நோக்கில் இவ்வாறு புதிய நீதிமன்றமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Advertisments

Standard Advertisments