இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை குறித்து புதுடெல்லியில் பேச்சுவார்த்தை

Date: 2017-10-12

(1507785532)625.147.560.350.160.300.053.800.264.160.90 (7).jpg

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைகள் குறித்து புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இலங்கையின் மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும், இந்தியாவின் விவசாய மற்றும் கால்நடைவள அமைச்சருக்கும் இடையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை புதுடெல்லியில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பது தொடர்பிலான நடவடிக்கைகளின் ஓர் கட்டமாக இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

அமைச்சு மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக நாளைய தினம் இரு நாடுகளினதும் அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு இடையில் அமைச்சு மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த உள்ளிட்ட குழுவினர் இன்று இரவு இந்தியாவிற்கு புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.

Advertisments

Standard Advertisments