அடைமழை காரணமாக இரு அமைச்சர்களின் பரிதாப நிலை

Date: 2017-10-12

(1507785721)625.147.560.350.160.300.053.800.264.160.90 (8).jpg

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பிரதான இரு அமைச்சர்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி ஆகியோரே பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் பெய்து வரும் அடைமழை காரணமாக குறித்த இருவரும் கொழும்பு நோக்கி செல்ல முடியாத நிலையில், இரு நாட்களாக அங்கேயே தங்கியிருப்பதாக அந்த அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் இந்த குழுவினர் விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரில் அங்கு சென்றுள்ளனர்.

குறித்த நிகழ்வு முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் கொழும்பிற்கு வருவதற்கு முயற்சித்துள்ளனர்.

எனினும் கடுமையான மழை காரணமாக ஹெலிகொப்டரில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விமான படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் இல்லாமையினால் வெளியே வரமுடியாமல் உள்ள இந்த குழுவினர் நேற்று மாலை வரையில் திருகோணமலை விமான படை முகாமில் தங்கிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisments

Standard Advertisments