வடமாகாணத்தின் முக்கிய நான்கு மாவட்டங்களில் இன்று மின்தடை

Date: 2017-10-12

(1507786048)625.147.560.350.160.300.053.800.264.160.90 (9).jpg

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று(12) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று காலை 08 மணி முதல் மாலை 05 மணி வரை வல்லிபுரம், உபயகதிர்காமம், புனிதநகர், கற்கோவளம், மாதனை, நெல்லண்டை, பருத்தித்துறை வெளிச்ச வீடு, சிவப்பிரகாசம் வீதி, 3 ஆம் குறுக்குத் தெருப் பிரதேசம், கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை ஆகிய பகுதிகளிலும்,

காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை கிளிநொச்சியின் முழங்காவில், நாச்சிக்குடா, நாச்சிக்குடா கடற்படை முகாம், வெள்ளாங்குளம், 651 ஆவது பிரிவு இராணுவ முகாம், இயாஸ் மொஹமட் ஐஸ் தொழிற்சாலை, ஆரோக்கியபுரம், மணியர் குளம், ஆனை விழுந்தான், வன்னேரிக்குளம், சோலை, ஜெயபுரம், நாகபடுவான், பல்லவராயன் கட்டு, வேராவில், கிராஞ்சி, வலைப்பாடு, குமுழமுனை, கரியாலைப்படுவான், அன்புபுரம் ஆகிய பகுதிகளிலும்,

காலை 08 மணி முதல் மாலை 05. 30 மணி வரை வவுனியாவின் தவசிக்குளம் கிராமம் மற்றும் அட்டம்பஸ்கட கிராமம் ஆகிய பகுதிகளிலும்,

காலை 08 மணி முதல் மாலை 05.30 மணி வரை மன்னார் மாவட்டத்தின் முருங்கன் பிரதேசத்திலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Advertisments

Standard Advertisments