மலேசிய கடவுச்சீட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை

Date: 2017-10-13

(1507870078)625.147.560.350.160.300.053.800.264.160.90 (8).jpg

கடந்த திங்கட்கிழமை மலேசிய கடவுச்சீட்டுக்களுடன் பிடிபட்ட ஐந்து இலங்கையர்கள் தொடர்பில் மலேசிய குடிவரவு திணைக்களம் இந்தோனே சியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக நியூ ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்தோனேசியாவின் ஊடாக ஐரோப்பியாவுக்கு செல்வதற்காக இந்த கடவுச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவு திணைக்கள பணிப்பாளர் டட்டுக் சேரி மஸ்டாபர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தோனேசிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ள ஐந்து இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஐந்து பேரும் மலேசிய கடவுச்சீட்டுக்களை கொண்டிருந்த போதும் அவை அவர்களின் பெயர்களில் இருக்கவில்லை.

இதேவேளை, தாம் மலேசிய மற்றும் இந்தோனேசியாவுக்கு இலங்கையின் கடவுச்சீட்டுக்களுடன் வந்து பின்னர் அந்த கடவுச்சீட்டுக்களை கிழித்தெறிந்து விட்டதாக குறித்த இலங்கையர்கள் ஐந்து பேரும் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

Advertisments

Standard Advertisments