மண்டைதீவில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

Date: 2017-10-16

(1508128749)625.147.560.350.160.300.053.800.264.160.90 (7).jpg

வடமாகாண சபை உறுப்பினர் என்.விந்தன் கனகரட்ணம் மண்டைதீவில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்.

மண்டைதீவில் இருந்து பல பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்கும் வறிய நிலை மாணவர்களுக்கும், மண்டைதீவு றோ.க.வித்தியாலயத்தில் இருந்து தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் மற்றும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியை வசீகரன் கபிலராணி அவர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகளை வடமாகாண சபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் வழங்கி வைத்தார்.

நேற்று யாழ். மண்டைதீவு றோ.க. வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் யோண் கொலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தீவக மறைக்கோட்ட குரு முதல்வரும் அல்லைப்பிட்டி - மண்டைதீவு பங்குத்தந்தையுமாகிய அருட்பணி மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளார், சிறப்பு விருந்தினராக அகில இலங்கை சமாதான நீதவான் அமிர்தநாதர் தங்கராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், புலமை பரிசில் மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியை ஜெயராஜ் டயானா அவர்களை பாராட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர் ஜீவன் (பிரித்தானியா), வல்வெட்டித்துறையைச் சேர்ந்த லவன் (பிரித்தானியா) ஆகியோர் இணைந்து ரூபா பதினான்காயிரத்தினை வழங்கி வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Advertisments

Standard Advertisments