நாட்டை பிரிக்கும் எந்தவொரு அரசியலமைப்பையும் அங்கீகரிக்கமாட்டேன்! சபாநாயகர்

Date: 2017-10-23

(1508737756)625.147.560.350.160.300.053.800.264.160.90 (5).jpg

நாட்டை பிளவுபடுத்தக்கூடிய எந்தவொரு அரசியலமைப்பையும் அங்கீகரிக்கப் போவதில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம புனித ஜெபமாலை ஜெபமாதா தேவாலயத்திற்கு 100 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

இந்த நிலையில் தேவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற உற்சவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாடாளுமன்றத்தின் சபாநாயகர் என்ற வகையில் நான் இதுவரை எந்தவொரு அரசியலமைப்பு குறித்தும் அறிந்திருக்கவில்லை.

அவ்வாறான நகல் ஒன்றைக் காணவும் இல்லை. எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அரசியலமைப்பு தொடர்பாக தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவும், அவற்றை நாடாளுமன்றத்தில் முன்மொழியவும் உரிமை உள்ளது.

அவ்வாறான முன்மொழிவுகளில் சில பிரேரணைகள் நாட்டைத் துண்டாடும் வகையானதாகவும் இருக்கலாம்.

ஆனால் அவை எல்லாமே முன்மொழிவுகள் மாத்திரமே. சபாநாயகர் என்ற வகையில் நான் கைச்சாத்திட்டால் மாத்திரமே அவை நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின் சரத்துக்களாக ஏற்றுக்கொள்ளப்படும்.

அந்த வகையில் நாட்டைத் துண்டாடக்கூடிய அல்லது பௌத்த மதம் உள்ளிட்ட எந்தவொரு மதத்திற்கும் அநீதி இழைக்கும் வகையிலான அரசியலமைப்பொன்றுக்கு சபாநாயகர் என்ற வகையில் நான் உயிருடன் இருக்கும் வரை கைச்சாத்திட மாட்டேன் என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisments

Standard Advertisments