சீரற்ற காலநிலையிலும் லவர்ஸ் லீப்பை நாடிச் செல்லும் சுற்றுலாப்பயணிகள்!

Date: 2017-10-23

(1508738886)625.147.560.350.160.300.053.800.264.160.90 (9).jpg

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்துள்ள போதிலும், அதனையும் மீறி வரும் சுற்றுலாப்பயணிகள் சிரமம் பாராது லவர்ஸ் லீப் நீர்வீழ்ச்சியை பார்வையிடுகின்றனர்.

நுவரெலியா - ஹாவாஎலிய, பொரலந்த ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பீதுருதாலகால வனப்பகுதியில் தன் அழகால் அனைவரையும் ஈர்க்கும் வகையில் லவர்ஸ் லீப் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

தனது காதலி கால் தவறி கீழே விழ செய்வதறியாது காதலனும் குதித்த சம்பவம் இந்த இடத்தில் இடம்பெற்றதாலேயே இந்த பெயர் வந்ததாக செவிவழிக்கதைகள் கூறுகின்றன.

இயற்கை அள்ளித்தந்த அழகு எனும் வரம் ததும்ப நுவரெலியாவில் அமைந்துள்ள லவர்ஸ் லீப் நீர்வீழ்ச்சியானது உள்நாட்டவர்களை மட்டுமல்லாது, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து இழுக்கின்றது.

தற்போது மழை மற்றும் வெயிலுடனான சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.

இருப்பினும் இந்த நீர்வீழ்ச்சியின் அதீத அழகால் இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் நீர்வீழ்ச்சியை பார்வையிட வருகின்றனர்.

Advertisments

Standard Advertisments