சீனா பறந்தார் சர்ச்சைக்குரிய பிரியங்க பெர்னாண்டோ

Date: 2018-03-13

(1520915009)625.147.560.350.160.300.053.800.264.160.90 (5).jpg

பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சீனா சென்றுள்ளார்.

பிரிகேடியர் பயிற்சி ஒன்றுக்காக, அவர் கடந்த 5ஆம் திகதி சீனா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான சர்ச்சைக்குரிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ அண்மையில் இலங்கைக்கு அழைக்கப்பட்டார்.

எனினும், அவரின் குடும்பத்தவர்கள் லண்டனில் தங்கியுள்ளதாகவும், அவர்களின் செலவுகளுக்காக இராணுவத்தினால் மாதாந்தம் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisments

Standard Advertisments