கண்டி வன்முறைக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

Date: 2018-03-13

(1520915734)625.147.560.350.160.300.053.800.264.160.90 (9).jpg

கண்டி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுளள்ளது.

லண்டனில் உள்ள வடமேற்கு இலங்கையர் பேரவை என்ற அமைப்பினால் மென்செஸ்டர் பகுதியில் நேற்று முன்தினம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 200 பேரளவில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற வன்முறையை வண்மையாக கண்டிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தி வன்முறையை முடிவுக்கு கொண்டுவருமாறு இலங்கை அரசாங்கத்திடம் தாம் வலியுறுத்துவதாக வடமேற்கு இலங்கையர் பேரவையின் பிரதிநிதியான பைஸா பரூக் தெரிவித்துள்ளார்.

Advertisments

Standard Advertisments