மக்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு மட்டக்களப்பு மாநகர முதல்வர் களவிஜயம்

Date: 2018-04-12

(1523507997)625.147.560.350.160.300.053.800.264.160.90 (6).jpg

மட்டக்களப்பு - புளியந்தீவு, சல்லிப்பிட்டி பிரதேச மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக அமைந்த காணிப்பதிவு தொடர்பான விடயங்களை ஆராயும் முகமாக மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் களவிஜயம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த களவிஜயத்தை நேற்று மேற்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

சல்லிப்பிட்டிப் பொதுமக்கள் மற்றும் ஞான வைரவர் ஆலய நிர்வாக சபையினரால் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கையாக அமைந்த இந்த விடயத்தினை நடைமுறைப்படுத்தும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் ஏற்பாட்டில் மாநகர முதல்வர் இந்த கள விஜயத்தை முன்னெடுத்துள்ளார்.

இதன் போது மட்டக்களப்பு மாநகர பிரதிமுதல்வர் கந்தசாமி சத்தியசீலன், மட்டக்களப்பு மாவட்ட காணி உத்தியோகத்தர் குகதா ஈஸ்வரன் மற்றும் மண்முனை வடக்குப் பிரதேச குடியேற்ற உத்தியோகத்தர் க.ஞானப்பிரகாசம் ஆகியோர் வருகை தந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விஜயத்தின் போது அப்பிரதேச மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு சாதகமான பல கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், மக்களின் காணிப்பதிவு விடயத்தை விரைவில் பூர்த்தி செய்து தருவதாகவும் மாநகர முதல்வர் உறுதியளித்துள்ளார்.

Advertisments

Standard Advertisments