25 தேங்காய்களை திருடிய நபருக்கு ஒரு லட்சம் ரூபா பிணை

Date: 2018-06-18

(1529298330)625.147.560.350.160.300.053.800.264.160.90 (6).jpg

தென்னந்தோப்பு ஒன்றிற்குள் அத்து மீறி பிரவேசித்து 25 தேங்காய்களை திருடிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தம்புத்தேகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

25 தேங்காய்களை திருடிய குறித்த நபரை அண்மையில் தம்புத்தேகம பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இதன் போது குறித்த நபருக்கு தம்புத்தேகம நீதிமன்ற நீதவான் கே.ஏ.ஆர். நதிசானி, ஒரு லட்சம் சரீரப் பிணையில் சந்தேக நபரை விடுதலை செய்துள்ளார்.

18 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Advertisments

Standard Advertisments