அரசாங்கத்தை விட்டு விலகிய சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் நோக்கம் இதுவே

Date: 2018-06-18

(1529298421)625.147.560.350.160.300.053.800.264.160.90 (7).jpg

அரசாங்கத்தை விட்டு விலகிய 16 பேரை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிளவடைய செய்ய முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தெற்கின் ஊடகமொன்றிட்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டுமென அனைத்து தேர்தல்களிலும் கூட்டு எதிர்க்கட்சியே கோரி வருகின்றது.

இந்த 16 பேருக்கும் மூன்றாண்டுகளின் பின்னரே மஹிந்தவை பிரதமராக்க வேண்டும் என்பது புரிந்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை இரண்டாக பிளவடைய செய்து தமது நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்வதே இந்த 16 பேரின் நோக்கமாக அமைந்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை நிறுத்துவது என்பதை மஹிந்த ராஜபக்ச தீர்மானிப்பார். தற்பொழுது பெயரிடப்பட்டுள்ள அனைவருமே ஜனாதிபதியாக தகுதியானவர்கள்.

மஹிந்த ராஜபக்ச உணர்வுபூர்வமான ஓர் தலைவராவார், பொருத்தமான நேரத்தில் பொருத்தமான ஒருவரை தலைவராக அவர் தெரிவு செய்வார் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Advertisments

Standard Advertisments