2020ஆம் ஆண்டு தற்போதுள்ள கூட்டாட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும்

Date: 2018-08-14

(1534220759)625.147.560.350.160.300.053.800.264.160.90 (5).jpg

யார் எதனைச்செய்தாலும் 2020ஆம் ஆண்டு தற்போதுள்ள கூட்டாட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காமாட்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விருட்சம் வீட்டுத்திட்டத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பள்ளிவாசல்களையும், இந்து ஆலயங்களையும் உடைத்து அதில் மகிழ்ச்சி கண்டவர்கள் இன்று அங்கிருந்து அரசாங்கத்திற்கு எதிராக பாதயாத்திரையினை தொடங்குகின்றனர்.

இந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 220 வீட்டுத்திட்டங்களை அமைக்கவுள்ளேன்.70 வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் 150 வீட்டுத்திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 வீட்டுத்திட்டங்களை அமைக்க நடவடிக்கையெடுத்துள்ளேன். அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வீடமைப்பு அதிகாரசபையின் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளை பணித்திருக்கின்றேன்.

அனர்த்தங்கள் நடைபெறும்போது பெற்றோரின் கவலையீனம் என்று கூறி அவர்களை நோக்கி கைகளை காட்டிவிட்டு இருக்க முடியாது.

அந்த குழிதோண்டும் வேலைத்திட்டம் மேற்கொள்ளும்போது எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பிலும் நான் தனிப்பட்ட ரீதியில் விசாரணைகளை மேற்கொண்டு எங்கே தவறு நடந்துள்ளது என்பதை அறிந்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையினை எடுப்பேன்.

இவ்வாறான ஒரு இழப்பு இந்தவேலைத் திட்டங்களை செய்தவர்களின் குடும்பத்தில் ஏற்பட்டிருந்தால் அதன் வலியும் வேதனையும் தெரியும்.

இந்த குழி தோண்டும் வேலையை செய்த ஒப்பந்தகாரரிடம் இருந்து பெருந்தொகையொன்றை நஸ்ட ஈடாக அந்த குடும்பத்திற்கு வழங்கவேண்டும். இதனை கண்டிப்பாக நான் பெற்றுக்கொடுப்பேன்.

மக்களுக்கு அபிவிருத்திகளை செய்வதற்கு நிதிகளை பெற்றுக்கொள்வதில்தான் அந்த போட்டியும் பொறாமையும் காணப்படுகின்றது.மக்களுக்கு சேவை செய்வதிலேயே அந்த நிலமை காணப்படுகின்றது.

தற்போது உள்ளது யார் ஜனாதிபதியாக வேண்டும்,பிரதமராக வேண்டும் என்ற போட்டியில்லை. இன்று ஆட்சியை கவிழ்ப்பதற்கு என்று யாத்திரைகளை செய்வதற்காக விகாரைகளுக்கு செல்கின்றனர். பள்ளிவாசல்களுக்கு செல்கின்றர்,இந்து ஆலயங்களுக்கு செல்கின்றனர்.

கடந்த காலத்தில் இவற்றினை இடித்து அதில் மகிழ்ச்சிகண்டவர்கள் தற்போது அங்கிருந்து யாத்திரைகளை மேற்கொள்கின்றனர். மீண்டும் சிம்மாசனத்தில் அமர மதகுருமார்களின்ஆசிர்வாதம் தேவையென்று நினைக்கின்றனர்.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு இந்த நாட்டினை இன்றுள்ள கூட்டு அரசாங்கமே ஆட்சியை கைப்பற்றி ஆளும் என்பதை இந்த இடத்தில் தெரிவிக்கவிரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisments

Standard Advertisments