பாலம் இடிந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாதை துண்டிப்பு

Date: 2016-11-15

(1479182259)201611150349205754_Bailey-bridge-collapses-over-100-villages-cut-off_SECVPF.gif

சிம்லா:

இமாச்சல பிரதேசம் மாநிலம் தந்தி - சன்சரி சாலையில் உள்ள பெய்லி என்ற பாலம் நேற்று இடிந்து விழுந்தது. இந்த பாலம் ஸ்பிடி மாவட்டத்தின் கிய்லாங் தலைமை மையத்தில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த விபத்தில் சம்பாவில் உள்ள பங்கி பழங்குடி பள்ளத்தாக்கும் மற்றும் அதனை சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.

30 மீட்டர் நீளம் கொண்ட இந்த தரைவழிப் பாலத்தில் அதிக எடையுடன் டிராக்டர் ஒன்று சென்ற போது பளு தாங்காமல் பாலம் இடிந்து விழுந்தது. 

அதனுடன் டிராக்டரும் சேர்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பாலத்தை சரி செய்வதற்கு மேலும் சில தினங்கள் ஆகும் என்று எல்லைப் புற சாலைகள் அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பாலமானது 150 கிலோமீட்டர் அளவிலான பாதையை இணைக்கிறது. இது விபத்துக்குள்ளதால், பங்கி பள்ளத்தாக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்வார் பகுதி இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Advertisments

Standard Advertisments