- ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி
- கிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்
- ’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்
- ‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது
பாராளுமன்றத்தில் ரூபாய் நோட்டு பிரச்சினை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
புதுடெல்லி:
500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு நாடு முழுவதும் பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (நவ.16) தொடங்க உள்ளது.
கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் மூத்த எம்.பி.க்கள், பாராளுமன்ற குழு தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது வரும் கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமான வழியில் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுமித்ரா மகாஜன் கூறுகையில், ரூபாய் நோட்டு பிரச்சினை, காஷ்மீர் வன்முறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. விவாதம் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்று ஒவ்வொருவரும் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் வன்முறை, சர்ஜிக்கல் தாக்குதல், ஓ.ஆர்.ஓ.பி மற்றும் அரசின் பாகிஸ்தான் கொள்கை ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியும் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.