- ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி
- கிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்
- ’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்
- ‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது
ஈராக்: ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் பலி
பாக்தாத்:
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் தெற்கு பகுதி மற்றும் பல்லூஜா நகரின் மேற்கு பகுதியில் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் சுமார் 15 பேர் கொல்லப்பட்டனர். 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
வெடிகுண்டு தக்குதலுக்கு முன்பாக தீவிரவாதிகள் ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது ஈராக் படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இந்த தாக்குதல்களில் தீவிரவாதிகள் தரப்பில் 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மொசூல் நகரின் வடக்கு பகுதியில் ஈராக் படைகள் முன்னேறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த தற்கொலைப் படை தாக்குதல் நடைபெற்றுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி ஈராக் படைகள் ஐ.எஸ் வசமுள்ள பகுதிகளை மீட்பதற்கான பதில் தாக்குதலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அப்பொழுது முதல் ஐ.எஸ் அமைப்பும் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றது.