2017-18 ஆண்டு முதல் 10ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும்: பிரகாஷ் ஜவடேகர்

Date: 2016-11-15

(1479182860)201611150531143842_Class-10th-board-exams-for-CBSE-schools-from-2017-18-HRD_SECVPF.gif

புதுடெல்லி:

2017-18 ஆண்டு முதல் மீண்டும் கட்டாயமாக 10-ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகள் அறிமுகப்படுத்தபட உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக ராஜஸ்தான் கல்வித் துறை மந்திரி இந்த முடிவு குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

அதேபோல் மாநில அரசுகளும் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மீண்டும் தேர்வுகளை அறிமுகப்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரை கேபினேட் மற்றும் பாராளுமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜவடேகர் தெரிவித்தார்.

பள்ளி கல்வியின் தரம் குறிப்பாக அரசு பள்ளிகளின் தரத்தினை உருவாக்குவதே முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.

Advertisments

Standard Advertisments