குடும்பஸ்தரின் உயிரை பலியெடுத்த மின்னல்

Date: 2016-11-15

(1479182959)625.117.560.350.160.300.053.800.210.160.90.jpg

முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில் நேற்று(14) மின்னல் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள மல்லாவிப்பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் திருநகர் மல்லாவியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து ஞானேஸ்வரன் (வயது- 62) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவரது சடலம் மல்லாவி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மல்லாவிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அவருடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மற்றுமொரு விவசாயியான வளநகர் மல்லாவியைச் சேர்ந்த செல்லையா வசந்தகுமார் (வயது 55) என்பவர் காயமடைந்த நிலையில் மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisments

Standard Advertisments